பின்னோக்கிப் பறக்கும் பறவையைப் போல் உனக்கு பிடறிக் குறுமயிரில் குடியிருக்கப் பிடித்திருக்கிறது நெற்கதிர் கற்றையைப் பற்றுவதுபோல் கழுத்தைப் பற்றிவிட முடிகிறதென்பாய் எலும்புகளை எண்ணுகிற பாவனையில் முதுகெலும்பின் கணுக் கணுவாக வருடி முத்தமிடுகையில் ஒவ்வோர் பருவத்திலும் என்னுள் சாகாத கனவுகளை விடுவித்தாய் நோயுற்ற …