தமிழ் இலக்கியத்தின் பெருமைக்குரிய முகங்களில் ஒருவர் ஜெயமோகன். அசுரத்தனமான எழுத்து வசப்பட்டவர். புனைவுலகின் அனைத்துத் தளங்களிலும் தவிர்க்கவியலாத பங்களிப்பைச் செய்து வருபவர். இலக்கியம் என்பது ஒரு இயக்க ரீதியான செயல்பாடு என்பதை தொடர்ந்து முன் நிறுத்துபவர். தமிழில் மிகவும் அரிதான ‘பயண…
இதழ் 7
- இதழ் 7நேர்காணல்
-
1 “உண்மையாகவா?” “ஆமாம்” “என்னால் நம்ப முடியவில்லை. உண்மையாகவே நீங்கள் நம் தேசத்தைக் கடந்து உலகின் வேறு எந்தப் பகுதிக்கும் சென்றதில்லையா?” “இந்த குற்றத்துக்காக எனக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று நம்புகிறேன்” “விளையாடாதீர்கள்” என்று சொல்லிவிட்டு சாயமணிந்த உதடுகளைத் திறந்து…
-
1 திங்கு திங்கென்று பாதித் தெரு தாண்டி நடந்துபோன பாண்டியம்மா, திரும்பவும் ஓடியாந்து வெறும் வீட்டவும் மொகட்டவும் பார்த்தபோது நெனவெல்லாம் அக்கக்காக கழண்டு தெசைக்கு ஒன்றாகப் போவது போல இருந்தது. ஒரு நிமுசம் சுதாரிக்காமல் விட்டிருந்தாளென்றால் கூட தன்னுசார் தப்பிப்போய் அங்கனக்குள்ளயே…
- இதழ் 7விமர்சனம்
இறந்த நிலவெளிகளின் ஆவிகளானவனும் பிரபஞ்ச சுயமரணத்தை சாட்சி கண்டவனும்
பச்சோந்தியின் ‘அம்பட்டன் கலயம்’ தொகுப்பை முன் வைத்து: பிரவீண் பஃறுளிby olaichuvadiby olaichuvadiதமிழ்க்கவிதை இன்று உள்ளது போல இத்தனை மையமற்ற தன்மையும், எல்லையற்ற சுதந்திரமும் முன்னெப்போதும் கொண்டிருந்திருக்குமா என்பது சந்தேகமே. எந்த சாராம்சத்திலும் கோடிட்டுவிட முடியாத, ஒற்றை முகமற்ற ஒரு பல்லுடலியாக இன்றைய கவிதை களிப்படைந்துள்ளது. நவீன கவிதை என்ற குறிப்பீடுகூட கொஞ்சம் பழமையடைந்துவிட்ட…
- இதழ் 7தொடர்
தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 3 சு. வேணுகோபால்
by olaichuvadiby olaichuvadi(7) அகதிகளாக, வேலைநிமித்தமாக குடியேறியவர்கள் வாழ்க்கை முறையில் புதிய சிக்கல்களைச் சந்திக்கின்றனர். அறமதிப்பீடுகளும் பண்பாட்டு மதிப்புகளும் காலாவதியாகப் போகின்றன. ஒரு வகையான திகைப்பு கூட ஏற்படுகிறது. வெளிநாட்டில் எதுபற்றியும் கவலைப்படாமல் ஓட வேண்டியதிருக்கிறது. ஆனால் அப்படி கவலைப்படாமல் தமிழர்களால் இருக்க முடிவதில்லை.…
-
1 ‘சத்திய சோதனை’க்கு உரையுடன் கூடிய செம்பதிப்பு சென்ற ஆண்டு வெளிவந்தது. த்ரிதீப் சுஹ்ருத் குஜராத்தி மூலத்துடன் ஒப்பிட்டு பல திருத்தங்களை செய்திருக்கிறார். பழைய பதிப்பையும் புதிய பதிப்பையும் இணையாக வாசிக்க வழிவகை செய்திருக்கிறார். அடிக்குறிப்புகளில் நிகழ்வுகள் மற்றும் ஆளுமைகள் பற்றிய…
- இதழ் 7கதைமொழிபெயர்ப்பு
மானுடன் உருது மூலம் : சையத் முகமது அஸ்ரஃப் தமிழில் : கோ.கமலக்கண்ணன்
by olaichuvadiby olaichuvadiசாளரத்தின் வழியே, கீழே அவர்கள் சென்று கொண்டிருப்பதை அவன் உற்றுப் பார்த்தான். திடீரென்று அவன் சாளரத்தை அடித்துச் சாத்தி விட்டு, திரும்பி மின்விசிறியை ஓட விட்டான். ஆனால், உடனேயே விரைந்து அவன் அதை அணைத்தும் விட்டான். பின்னர் மேசையருகே இருந்த…
-
கோகோகுஜி மடாலயத்தின் பிரதான வாயிலில் காவல் தெய்வமாக விளங்கும் நியோவை மாபெரும் சிற்பியான யுன்கே செதுக்கிக் கொண்டிருப்பதாக ஊரெங்கும் ஆரவாரப் பேச்சு நிலவியது. நான் அங்கு சென்று சேர்வதற்கு முன்பே ஒரு பெரும் கூட்டம் கூடியிருந்தது. அவரவர் மனம் போனபோக்கி்ல் சிற்பியின்…
- இதழ் 7கவிதைமொழிபெயர்ப்பு
பேட்ரிக் கவனாஹ் கவிதைகள் தமிழில்: பெரு. விஷ்ணுகுமார்
by olaichuvadiby olaichuvadiஅரூபமானவை நட்சத்திரவொளியில் மெய்மறந்து – முழுவதுமின்றி, நான் வரப்புகளிலும், இரவின் சதுப்புநிலத்திலும் ஊடாகச் செல்கிறேன். அமைதியான இக் கிராமப்புறத்தில், பெயரிடப்படாத, வெற்றிடத்தில், பேய்பிடித்த நெட்டிலிங்கமரங்கள் கிசுகிசுக்கின்றன. கருப்போ, நீலமோ, சாம்பல் நிறமோ, சிவப்போ, பழுப்போ இல்லாத நான் பயணிக்கும் வானம், ஒரு…
-
அலறித் துடிக்கும் பிரதிகள் எழுதுவதில்என்ன இருக்கிறதுசிலுவையில் ஒன்றைஅறைந்து வைப்பதுதானே அதுஉயிர்ப்பிக்கும் அற்புதம்வாசிப்பில் இருக்கிறதுவாசிப்பு என்பதுமறுபடைப்பு என்றுசொன்னாலும் சொன்னார்கள்கை நிறையஆணிகளோடு வந்துஎற்கனவே சிலுவையில் தொங்குபவரின்கேந்திர ஸ்தானங்களில்ஆழ இறக்கிப் போகிறார்கள்அற்புதம் அற்புதம் என்னும்சிலுவை ராஜனின் குரலோபரலோகத்தை எட்டுகிறது. பிரதி என்னும் வரிக்குதிரை வரிக்குதிரையொன்றின்வரிகளுக்குவேறு வேறு…