• நுண்ணிய நூல் பல கற்பினும்    தாஸ்தாவஸ்கி படித்தென்ன தால்ஸ்தாய் படித்தென்ன செகாவ் படித்தென்ன கார்க்கி படித்தென்ன சிவராம காரந்த் வாசித்தென்ன விபூதிபூஷன் பங்தோபாத்யாய வாசித்தென்ன தாராசங்கர் பானர்ஜி வாசித்துதானென்ன பஷீர் வாசித்துதானென்ன சங்கம் / சிலம்பு பயின்றென்ன தேவார திருவாசகம் பயின்றென்ன சிற்றிலக்கியம் …

  • ”இச்சாமதி என்றால் நினைத்ததை அருள்பவள்” என்று படகோட்டி சொன்னான். “இச்சாமதி” என்று ரமா சொல்லிக்கொண்டாள். “நல்ல பெயர், எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு பெயரை எவரும் போட்டு நான் கேட்டதில்லை” “இது ஆற்றின் பெயர், மனிதர்களுக்கு எப்படி போடமுடியும்” என்றான் படகோட்டி. …

  • “ ஆன்சியைப் பாத்தியா?” “ இல்ல” “ சுமாவ? ” “ நீ எதுக்குப்பா இத எல்லாம் கேட்டுகிட்டு இருக்க? என் பெண்டாட்டி கூட இப்படி எல்லாம் கேக்கறது இல்ல” “அவளுக்கு உன்னப் பத்தி என்ன தெரியும்? நீயும் நானும் என்ன …

  • அதிசய பாலமுருகன் எனக்கு பாலமுருகன் போல வேறு ஊர்களில் வேறு ஒருவருக்கு வேறு ஒருவர் எல்லாரும் இன்றைக்கு என்னுடைய நினைவிற்கு வந்தனர் அவர்கள் என்னுடைய பக்கத்திலில்லை அவர்கள் யாரும் எனக்கு பழக்கமுமில்லை அவர்களை நான் பார்த்ததுமே இல்லை பாலமுருகன் என்னுடைய பால்ய …

  • அவன்  கருப்பாய்  இருப்பான். ஆனால்  வசீகரமாய் புன்னகைப்பான். ஆனா என்ன ஆனா… கருப்புன்னா கேவலமா… அப்படியெல்லாம்  இல்ல.இருளைக் கிழிக்கும் ஒளிக்கீற்று போல பல்வரிசை பளீரிடும்போது கருப்பு  தேன். கருப்பு  காந்தம். கருப்பு  மென்மழைச்சாரல். கருப்பு மயிர்கூச்செறிய  வைக்கும்  அந்தரங்க  சுகம். சுகந்தி   தனக்குள்  சிரித்துக்கொண்டு  ஜன்னல்  வழியே  பார்வையை  வீசினாள்.பேருந்து  உறுமியபடி  நின்றிருந்தது. கிளம்பும்  …

  •   நோதல் நீண்ட நாட்களுக்குப்பிறகுநலம் விசாரித்து வரும்போனிற்குநன்றாயிருக்கிறேன் எனஎதிர் முனை நம்பும்படியாகதிறம்படகூறியது போலவேநன்றாயிருந்திடவும்நேர்ந்தால்எவ்வளவுநன்றாயிருக்கும். சினம் காக்க வெடுக்வெடுக்கெனசுவிட்சுகளைப்போடும் விரல்கள்திடீர்திடீரெனமுளைத்து விடுகிறது.அறைந்துப் போட்டதில்தள்ளாடிச் சுழல்கிறது ஃபேன்.கண்ணைக் குத்துவதுபோலபோட்டதில்அணைந்தணைந்து எரிகிறதுடியூப் லைட்.மிருதுவாய் இனிகையாள வேண்டும்அச்சமயத்தின் மெல்லிசைஅந்த பால்கோவாவில்லைகளுக்கும்கேட்கும் வகையில். காந்தி மைனாதம் காவிரி ஆற்றங்கரையோரம்வள்ளி …

  • பொம்மன் பாட்டாவுக்கு அப்போதுதான் உயிர்பிரிந்தது. கடைசிமகளான சுந்தரி அவர் தலையை தன் மார்போடு சேர்த்துப் பிடித்து அவருக்குப் பிடித்த வறக்காப்பியை ஊற்றிக் கொண்டிருந்தாள். அது தொண்டையில் இறங்காமல் அவளின் சேலையில் வழிந்தது. ‘யய்யா..’ என்று அவள்  வேகமாக கூப்பிடவும் மற்ற பெண் …

  • 1 “பச்சப்பசேலுன்னு வழி முழுக்க நெடு நெடுன்னு மரம், பின்னால மலை. சுத்தமான காத்து. இயற்கைல வாழுறது எவ்வளவு சுகம். கவித மாதிரியான வாழ்க்கை இல்லைங்களா? அதோ தெரியுதே மலையுச்சி, அங்க இருந்து சூரியன் உதிக்கத பாக்கணும்.” இரப்பைகள் இறங்கி, விழிகளை …

  • வேறொன்றுமில்லை நீங்கள் இவ்வளவு வெறுப்பதற்கு முன்னால் அவ்வளவு நேசித்திருக்க வேண்டும். நீங்கள் இப்படி அழுவதற்கு முன்னால் அப்படி சிரித்திருக்க வேண்டும். ஒட்டுறவு பூத்ததும் பூரித்து நின்றது. காய்த்த போது புளிப்பை குறித்து குறை பட்டுக்கொண்டது. கனிந்த பிறகோ இனிப்பைப் பற்றிய நினைப்பும் …

  • ஊத்தங்கரை தேவாலயத்தின் உள் சுவர்கள் அதிர  அதிர மேரியின் குரல் கனத்துக்கொண்டே  போனது.  அவளது கேவல் உடைந்து அந்த தேவாலயமே ‌அழுவது போல் குலுங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் மூவரைத் தவிர தேவாலயத்தில் யாருமில்லை. தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் நடுவிலிருந்த வெள்ளை முடியை …